Saturday, November 5, 2011

ஈழத்தில் ஆழம் அறிய முடியாத காலப் பெரு வேர்கள்!

இப்போது கார்த்திகை மாதம்!
கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி
எம் கண்ணீரில் வறண்டு போன
தேசத்திற்கு மழை பொழிந்து
காலப் பெரு வெளியில்
தமிழர் தம் வாழ்விற்காய்
கல்லறையுள் துயில் கொள்ளும்
ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை
நினைவு கூர்ந்து
குளிர்விக்கும் நன் நாள் இது!
அடிமைத்தளையுள் சிக்கி
தமிழன் உணர்வை தொலைத்து
வம்சம் தனை இழந்து
வாழ்வை பறி கொடுத்து
வந்தேறு குடி என சிங்களரால்
வழங்கப்படும் நாமத்தை பெற்று
வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து
உலகறியா இனமாக ஈழத் தமிழன்
உருமாறிச் சிதைந்திடுவான்
என இறுமாப்போடு
எமை அழிக்க வந்தோர்க்கு
தமிழர் தம் வீரம் உணர்த்தி
துயில் கொள்ளும்
குழந்தைகளை
நினைவு கூறும் நன் நாள் இது!

பேசும் தெய்வங்களும்
காவல் தெய்வங்களும்
எங்கே என அடி முடி தேடிய
தமிழர் தலை முறைக்கு
நும் அருகே இருக்கிறார்கள்
காவல் தெய்வங்கள்-
உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்
கல்லறையினுள் துயில்கிறார்கள்
என சேதி சொல்லி எமை நிமிர்ந்து
நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது!

வீழும் தமிழர் இனம்;
தமைக் காக்க வழி தெரியாது
தம் எதிர் கால வாழ்வை
தொலைத்து சாகும் தமிழர் இனம்
என இனவழிப்பு நடனம் ஆடிய
இனவாதப் பேய்களுக்கு
ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என
உணர்த்த ஒரு தானைத் தலைவனை
தந்ததும் இந்த மாதம் தான்!

கல்லறையை அழித்தோம்;
கருமமே கண் எனவாகி
தமிழர் தம் உணர்வுகளை
நீறாக்கி பொசுக்கி விட்டோம்;
போரில் பின்னடையை வைத்தோம்;
ஊரில் இருந்த உணர்வுள்ள
மனிதர்களையும் உருத் தெரியாதோர்
ஊடாக உருவம் அழித்தோம் - என
இறுமாப்பு கொண்டு நிற்கும்
இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு
மக்கள் தம் மனதில்
இன்றும் இவர்கள் இருக்கிறார்கள்
எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!
நீங்கள் வாழும் தெய்வங்கள்!
எம் வாசல் வந்த பகையை
அழித்து எமை காத்து நின்ற
நடமாடும் செல்வங்கள்!
கண் முன்னே தரிசித்தோம்!
பகை கண்டு அஞ்சற்க
எனச் சொல்லி நின்றவர்கள்!

என மண் முன்னே நிற்கையிலும்
மன்னவனின் மொழியினை
மனதில் நிறுத்தி
தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று
வேரென எம்மோடு தொடரும்
பெரு விருட்சங்கள் நீவிர்!

கார்த்திகைப் பூவும்
கதிரவன் ஒளியும்
பார்த்திருக்கப் புலியானோர்
சேதிகளும்
உம் பாதம் தொடர்ந்தனவே!
வார்த்தைகள் கொண்டு உமை
எப்படிப் பாடி
கவிப் பா ஆக்கிடலாம் என
எண்ணினாலும் தமிழில்
ஏதும் சிக்கலையே எம் தேவரீரே!

நும் நினைவுகள்
எம் மனக் கனவுகள்!
கல்லறையை அழித்தோம்
என கூப்பாடு போடுவோர்
மனக் கல்லறையை
திறந்து பார்க்கா
இனத்துவேச மனிதர்களுக்கு
இன்றும் மக்கள் மனங்களில்
வாழ்கிறோம் யாம் என
சேதி உரைத்து நிற்கிறீர்களே!
உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்
எனும் உணர்வோடு
நாமும் நடக்கிறோம்!
**********************************************************************************************************

Friday, November 4, 2011

எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும் ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக் காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும் ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.

வெட்கத்தையும் பரிகசித்தவர்களின் பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம் ஈழத்து யுவதிகளது கூக்குரலின் ஆதாரம் இது.

காலை பத்து மணி இருக்கும், அயலூரில் இருந்து என் வருகை தெரிந்து என்னைச் சந்திக்க வந்தபோது. தன்னை அறிமுகம் செய்துகொண்டு தன் தோழிகளுடன் முன்னிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். மற்றவர்களும் சற்றுத் தயக்கமும் கண்களில் கலக்கமுமாக என் முன் தோழிகளுக்குத் துணையாக ஆசுவாசமாக அமர்ந்தார்கள்.

1987, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஃபிரண்லைன் மற்றம் இந்து இதழ்களுக்கு கொடுத்த பேட்டியில் தமிழினத் தலைவர் வே.பிரபாகரன், “எமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை எங்கள் இதயங்கள் மிக ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார் (ஃபிரண்லைன் 04.09.1987). தாங்கமுடியா வெப்பத்துடன் அதே உணர்ச்சிகளின் தகிப்புடன் என் முன்னே அமர்ந்திருந்தார்கள். வெப்பத்தின் வீச்சு கதிர் வீச்சு போல அரித்தது.

அவள் பேச ஆரம்பித்தாள். பாசமும் கண்டிப்பும் இரண்டு கண்களாக பூசிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் நான். என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் பிள்ளை. அதனாலேயே செல்லமாக வளர்க்கப்பட்டேன். கனிவுடன் கற்பிக்கப்பட்டேன். இளமை தமது அழைப்பிதழை நீட்டிய பிறகு கலை ஞாயிறென ஒளிர்ந்திருந்தேன்.

இள மொட்டுக்கள் நாங்கள் கூடிய நேரங்களில் எமது நாட்டின் நிலைமைகளையும் பேசியிருக்கின்றோம். “நில மீட்புக்காகவே இந்தப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழீழம் எமக்கு சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம். இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் 1999-ஆம் ஆண்டு மாவீர்ர் தின உரை முழக்கத்தையும் சிலிர்ப்புடன் சிலாகித்திருக்கின்றோம்.

பல யுவதிகள் போராட்டத்திற்கு தற்கையளிப்பு செய்தபோது, எனக்குள்ளும் ஆர்வம் இருந்தது. நான் இல்லை என்று சொல்லவில்லை. என் நாட்டிற்கா போராட வேண்டும் காடையரின் கங்கறுக்க வேண்டும் காலத்திற்கும் தமிழீழம வாழ வேண்டும் என்ற வேகம் இருந்தது. ஆனால் ஏனோ சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. வீட்டிலும் ஒரே கவலை. பாசம் தானே. அவர்களும் என்னதான் செய்வார்கள். ஒரே பிள்ளையாயிற்றே.

எனவே யாராவது வந்து கூப்பிட்டால் கூட நான் போய்விடக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால், காலத்தின் சூத்திரம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2008-ஆம் ஆண்டு சிங்களவனின் கொடூர முகம் குண்டுகளாய் விழ ஆரம்பித்தது. அவனது அகங்காரச் சிரிப்பு நெருப்புப் பிழம்புகளாய் பற்றி எரிந்தது. தப்பிக்க வழிதேடி எல்லோரும் ஓடியது போல, நாங்களும் கையில் அகப்பட்டதை கக்கத்தில் அடைத்துக் கொண்டு ஓடி ஒளிய ஆரம்பித்தோம். வானத்தையும் அதில் ரீங்காரமிடும் விமானத்தையும் பார்த்து அழுதபடி ஓடிக்கொண்டே இருந்தோம். நடந்து மூச்சு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். என்னால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. எனவே என் பெற்றோர் என்னைப் பாதுகாக்கும் வழி தேடினார்கள். தேவிபுரம் காட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு என் சித்தப்பா என்னை மட்டும அழைத்துச் சென்றார்கள்.

அந்த வீட்டிலும் மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இங்கு ஓர் உறவினர் இருக்கிறார் என்ற எந்த அறிமுகமும் அதுநாள் வரை என் பெற்றோர் சொன்னதில்லை. காரணம், அவர்கள் எங்களது ரத்த சொந்தமோ மத்த சொந்தமோ இல்லை. ஈழச் சொந்தம் மட்டுமே.

அச்சொந்தம் யாரையும் ஏமாற்றாது என்பது எம் சித்தப்பாவின நம்பிக்கை. அதன்படி என்ன அவர்களது வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார்கள். நம்பிக்கை பொய்க்கவில்லை. தமது பிள்ளைகளில் ஒருத்தியாகவே என்னை பராமரித்து வந்தார்கள். நாள் கணக்கு இல்லை.... வாரக் கணக்கும் இல்லை....மாதக் கணக்கு. ஆம், நான் ஆறு மாதங்கள் அந்த வீட்டிலே இருந்தேன். வெளியார் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தேன்.

ஒரே கவலை. எங்கே போனார்கள் தாயும் தந்தையும் என் குடும்பத்தினரும். எந்த பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே... வேளாவேளைக்கு சாப்பிட்டார்களா.... ஓய்வாக உறங்கினார்களா ... அதற்கெல்லாம் தான் வாய்ப்பிருக்காதே... பிறகு என்ன ஆயிருக்கும்...? நாமாவது ஒரே இடத்தில் இருப்பதால் உண்ண உணவு, உறங்க வீடு இருக்கிறது. பதுங்கிக்கொள்ள பங்கர் இருக்கிறது. பெற்றோருக்கு....

என் பெற்றோர் காயத்துடன் எங்காவது ஆதரவின்றி கிடப்பார்களோ... ஒரு வேளை உணவும் இன்றி, தப்பிக்க வழியுமின்றி சிங்களவனின் குண்டு பாய்ந்து செத்துப் போயிருப்பாங்களோ...? நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சம் விம்மியது. குரல் கம்மியது. எப்படி தூங்கினேன். எப்பொழுது தூங்கினேன் என்பதெல்லாம் தெரியாது. ஒருவேளை அழுது வீங்கிய கண்களுக்கேது தெரியுமோ இல்லையோ!

எதிர்பார்த்திராத வேளையில் ஒருநாள் என் பெற்றோர் என்னைத் தேடி வந்தார்கள். இனியும் காலம் தாழ்த்தி என்ன செய்ய என நினைத்தவர்கள் என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். நாங்கள் அதுவரை இருந்த இடம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை காவு வாங்கிய சிங்களவனின் குரூரத்தை வெளிக்காட்டிய முள்ளிவாய்க்காலுக்கு அருகில் இருந்த இடம். அது 2009, மே 29 ஆம் தேதி நடந்தது. நாங்கள் பிப்ரவரி மாதம் அங்கிருந்து கிளம்பினோம்.

என்ன கையில் கிடைக்கிறதோ அதைக் கொண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதியாக கையில் அகப்பட்டதைக் கொண்டு சென்றோம். கடல் வழியாகப் பயணித்தோம். கரையிரங்கும் வரை கதிகலங்கிப் போயிருந்தோம். அதோ கரை தெரிகிறது. அந்த இடம் தான் பருத்தித் துறை என மெதுவாகப் பேசிக்கொண்டோம்.

ஏனென்றால் அது, கட்டுப்பாடு இல்லாத சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பருத்தித்துறையில் வந்து இறங்கினோம். துப்பாக்கியின் குரூர வாசத்தில் சுகம் காணும் வீரர்கள் இருவர் எங்களை வழி நடத்தினார்கள். இல்லை இல்லை “வலி”காட்டினார்கள்.

அவர்கள் குறித்திருந்த இடத்தில் நிறுத்தப்பட்டோம். சுற்றிலும் இராணுவ வீர்ர்கள் நின்றார்கள். வீடியோ கேமராக்கள் தயார் நிலையில் இருந்தன. எமக்கு விடுதலை அளித்து அதை வெளி உலகுக்கு அறிவிக்கப் போகிறானோ என நினைத்துக் கொண்டிருந்த போது, எல்லோரும் உங்கள் உடுப்புக்களை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நில்லுங்கள் என்ற மானங்கெட்ட குரல் இடியென இறங்கியது. நாங்கள் அதிர்ந்து போனோம்.

முகத்தில் கைபொத்தி விம்மி விம்மி அழுதோம். வெடி ஓசைக்குப் பழக்கப்பட்டவனின் காதில் விம்மல் புரியாமலே போனது. கறிக்கடைக்காரனிடம் ஜீவகாரூண்யம் பேசினது போல் இருந்தது.

எம்மைச் சுற்றி என் தந்தை நின்றார். என் தாய் நின்றார். எம்மோடு கடல் பயணத்தில் உயிர் மூச்சின் அனலோடு வந்த சகோதர சகோதரிகள் நின்றார்கள். அவமானமும் வெட்கமும் எல்லோரையும் ஆட்சி செலுத்தியது.

யாரும் யாரையும் காப்பாற்ற முடியாமல் நின்றோம். ஆறுதல் கூற முடியாமல் தவித்தோம். ஒரு வீட்டில் இறப்பு நடந்தால் ஊரே திரண்டு ஆறுதல் சொல்லும். ஊர் முழுவதும் இறப்பு என்றால் யார்தான் யாருக்காக அழ முடியும். அதே நிலையில்தான் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். ஆனால் வீடியோ கேமராக்கள் தயாராயின. காமப் பார்வையின் கண்கள் வழி காட்சிகள் கரைந்து விழுந்தன.

சில நாட்களுக்கு முன் யுவதி ஒருத்தி கருத்தாங்க வேண்டிய வயிற்றின் மீது வெடிகுண்டு சுமந்து வந்தாராம். தான் பிறந்த மகிழ்வின் அடையாளத்தை தாயின் வயிற்றின் மேல் கோட்டோவியமாய் தீட்டி மகிழ்வார்கள் பிள்ளைகள். ஆனால், அந்த ஓவிய மொழியைப் புரிந்து ஆனந்திக்கும் வாய்ப்பை புறந்தள்ளி ஈழத்தாயின் வயிற்றில் கோட்டோவியம் தீட்ட அந்த பெண் பிள்ளை வந்திருக்கிறாள். சிங்களவனின் சோதனையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறாள்.

எனவே, பருத்தித்துறைக்கு வந்திறங்கும் அனைவரையும் அவிழ்த்துப் பார்த்தார்கள். அதனைப் படமாக்கினார்கள். அவர்களது கெடுபிடிக்கும் கேமராவுக்கும் தப்பமுடியாததால், எல்லாம் முடிந்த பிறகு வெட்கத்துடன் எல்லோருடனும் நடந்தேன்.

“பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை” என்ற எம் தமிழினத் தலைவருடைய பெண்ணுரிமைச் செயல்பாட்டின் வைர வரிகளை நினைத்தபடி வந்தேன்.

யார் முகத்தையும் யாராலும் அதன் பிறகு பார்த்து பேசமுடியவில்லை. மனதில் இருந்த ரணம் முகத்திலும் தெரிந்தது.

இன்னும் வரும்...

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
ஈழநேசன்

சுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள் இளைஞர்கள். “எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள் இளைஞர்கள்.

நமக்கானதொரு தேசத்தை சொந்தமாக்க உயிர் உடன்பிறப்புக்களை சத்தமின்றி பிரிந்தவர்கள் இவர்கள். களமாடி நின்ற காலங்களில் தம் நலம் நாடாது மக்கள் நலம் நாடி எக்காலத்துக்குமான காவியமானவர்கள் இவர்கள்.

காவிய நாயகர்கள் மாகாவியமாகிப் போன வேளையில் நான் ஈழத்தமிழர் பகுதிகளில் நின்றேன். இயல்பான மகிழ்வும் இயற்கையான வளமையும் இல்லா எதிர்கால வரலாற்று உயிரோவியங்களை பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. அருளில்லா ஆலயம் போல இருந்தார்கள் அவர்கள். வறண்ட பாக்காப் பள்ளத்தாக்குபோல சோர்ந்து காய்ந்து கிடந்தார்கள்.

“விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி” என்ற தமிழீழத்தலைவரின் அனுபவ வார்த்தையை எம் எதிர்கால வசந்தங்களின் உணர்வலைகளில் ஏற்ற இளைஞர் யுவதிகளுக்காக சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தோம். தகவல் கிடைத்தவர்களில் துணிவுள்ளவர்களும் கனவுள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.

17.07.2011 ஞாயிறு அன்று நடைபெற்ற கூட்டத்தில் வட்டமாக அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் வலுவில்லாத கேள்விக்குறிகள் மட்டும் பொதுவாய் இருந்ததை அவதானிக்க முடிந்தது. சலனமற்ற வளிமண்டலத்தில் ஒரு மேகமாக பேச ஆரம்பித்தேன்.

"குண்டுகள் வெடிக்கவில்லை. ஆகாயத்தில் கச்சேரி நடத்திய போர்விமானங்கள் பறக்கவில்லை. இரச்சல் கேட்டவுடன் பங்கர் தேடிய நிலை இல்லை, புதிது புதிதாக பதுங்குழிகள் வெட்டவேண்டிய அவசியமில்லை. நடந்துகொண்டே வாழ்ந்து திரிந்த வாழ்க்கை இல்லை. இராணுவம் அரணாக எங்கும் அமைதி, எதிலும் அமைதி. அந்த சூழ்நிலையில் என்ன செய்வதாய் உத்தேசம்? இந்த அமைதியை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது இவை கல்லறைச்சுவர் என இயம்புகின்றீர்களா? என்ன செய்வதாய் உத்தேசம்?" என்றேன்.

பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் திறக்கப்பட்ட வாயில்நோக்கி விரைந்தோடுவதுபோல கருத்துக்கள் பல ஒவ்வோருவரிடமிருந்தும் விரைந்து வரத்தொடங்கின. வெடிகளே வெளிச்சம் கொடுத்த நாட்கள் அன்று இருந்தன. இன்று வெளிப்படையாக வெடியோசை இல்லை. அவ்வளவே.

வெடித்து சிதறிய சில்லுகளாலும் பற்றி எரிந்த குடில்களாலும், எங்களை பொசுக்கிபோன தழல்களாலும் நாங்கள் இழந்தது அதிகம் தான். ஆனால் அவையெல்லாம் மீண்டும் பெற்றுவிடக்கூடியவை.

இப்போது முடியாவிட்டாலும் காலச்சுழற்ச்சியில் பெற்றுவிடலாம்தான். ஆனால் இப்பொழுது பொருளாதாரம் மற்றும் கலாச்சார சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறதே. இதை எதைக்கொடுத்து பெறுவது? என்று அங்கலாய்த்தார்கள்.

காங்கேசன்துறையில் மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த இடம் முழுவதும் சுண்ணக்கல் அல்லது சுண்ணாம்புக்கல் அமுத சுரபிபோல கிடைக்கிறது. யாழ்ப்பாணம் வளங்கள் நிறைந்த பூமி என்பதற்கு இவையும் சான்றாகும்.

இது சிமெண்ட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களிள் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு மொத்த இலங்கையின் சிமெண்ட தேவையை நிவர்த்தி செய்தது இந்த ஆலைதான்.

ஆனால் இன்று அது மூடப்பட்டிருக்கிறது. இங்குள்ள கனிமங்களை வெட்டி எடுக்கிறார்கள். அங்கேயே உடைக்கிறார்கள். தமிழர்களுக்கோ அதனால் எந்த பயனும் கிடைப்பதில்லை.

மாறாக புத்தளத்தில் உள்ள சிங்களவனின் ஆலைக்கு அதனை கொண்டு செல்கிறார்கள். வசதிகள் பறிக்கப்படும் அந்தப்பகுதியிலும் மீள்குடியமர்த்தல் ”நடைபெறுகிறது” என்பது இன்னுமொரு அபத்தம் என்று சொல்லி கொள்ளையிடும் கயவர்களை நினைத்து கொந்தளித்தார்கள்.

உயிருக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்து வீட்டை விட்டு ஓடிஒழிந்து திரிந்தவர்கள் நாங்கள். அவதியிலிருந்து மீண்டு, மீண்டும் வந்தபோது எங்களது வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தது. காவலர்களின் ஆக்கிரமிப்பாகி அவை இருந்ததன.

சொந்த வீடு இருந்தும் அந்நியமாகி நிற்கின்றோம். “இது பொலிஸ் ஸ்டேசனுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதி” என்று பல்வேறு பகுதிகளில் தகவல் பலகைகள் வைத்து முள் வேலியும் அமைத்து விட்டார்கள். எமது நிறைய சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்கள்.

சிங்கள மொழி ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாடு பல்வேறு அரசுசார்ந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

ஆனால் இனவெறிபிடித்த சிங்கள அரசு, ஜனவரி 10ஆம் திகதி மாநாட்டின் இறுதிநாளில் யாழ்வீரசிங்க மண்டப முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது. அக்கொடூர துயரில் ஒன்பதுபேர் செத்து போனார்கள்.

இன்று அதே யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் சிங்களத்தின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அனைத்து எதிர்ப்புக்களுக்கும் மிரட்டலுக்கும் பின்னே முனகிகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி இல்லைத்தானே. இப்போது சிங்களம் தெரிந்தால்தான் வாழமுடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார்கள்.

பரந்த மொழிஅறிவு இருக்கின்றபோது, உலக ஞானத்தை, பெரியோர்களின் கருத்துக்களை, நாடுகடந்த விடுதலைப்போராட்டத்தை, உண்மையின் உரைகல்லை நாம் அறிந்துகொள்ள முடியுமே என்று நான்கேட்டேன்.

அதற்கு, மொழி விருப்பம் என்பது,தாய்ப்பால் தேடும் குழந்தைபோல இயல்பாக வரவேண்டும். இங்கே திணிக்கப்படுகிறது. அதிகாரத்தன்மையுடன் கட்டாயப்படுத்தப்படுகின்றது என பரந்த பார்வையுடன் பேசினார்கள்.

குடிப்பழக்கமும் ஆபாச குறுந்தகடுகளும் எம் சகோதரர்கள் பலரின் மூளையை சிதைத்து விட்டன. கடைசிகட்ட போர் ஆரம்பிப்பதற்கு முன்பே குப்பை மேட்டிலும் பேரூந்து நிறுத்தத்திலுமாக பல்வேறு இடங்களில் ஆபாச குறுந்தகடுகள் கேட்பாரற்று கொட்டி கிடந்தன. அனைத்தையும் எடுத்து பார்த்து பழகி மூளையை மழுங்கடித்து கொண்டார்கள் சிலர்.

இன்னும் சிலர் சாராயத்தின் வாசத்தில் நாட்டின் சுவாசத்தை வியாபாரம் செய்தார்கள். மிகப்பெரிய திட்டத்துடன் மறைமுகமாக அரங்கேற்றப்பட்ட இத்திட்டத்தில் நாம் வீழ்ந்து போனோம். சிங்களவன் பயங்கர படைபலத்துடன் எங்களை நெருங்கியபோது போகத்திற்கும் போதைக்கும் பழகிப்போன பலரின் மூளை நாட்டின் நாணயத்தன்மையை மறைத்தது. இன்றுவரை மயக்கம் தெளியாமல் பலர் சீரழிந்து வருகிறார்கள்.

“மொழியும், கலையும், கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனிதவாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது” என்ற நம் தலைவரின் நற்சிந்தனை நினைவுகளில் வந்து சென்ற வேளைகளில் மனம் திறந்த விவாதத்தின் இடையே அரங்கிற்குள் ஒருவர் நேரடியாக நுழைந்தார்.

நம் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட அநியாய போர் குறித்த ஐக்கியநாடுகள் விசாரணைக்குழு தனது அறிக்கையை ஏப்பிரல் 12,2011 இல் ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூனிடம் அளித்தது. அது ஏப்பிரல் 25ல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை,

1. இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டவீச்சுக்கள் மூலம் பெரும்தொகை பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாயின.

3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.

4. போரில் உயிர்பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயரவைக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்திற்குரியவர்கள் ஆகியோர் தொடர்ந்தும் மனிதஉரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.

5. போர்க்களத்திற்கு அப்பாலிருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனிதஉரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெளிவுபடுத்தியிருக்கின்றது.

ஆனால் வெளிநாட்டிற்கு பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் இந்த அறிக்கை பொய்யானது என்றும் இப்படியான அழிவுகள் நடைபெறவே இல்லை என்றும் மற்ற நாட்டு தலைவர்களிடம் பேசியிருக்கின்றார்.

தனது அரசியல் எதிரி அழியட்டும் என்ற எண்ணத்தைவிட தமிழர்கள் அழியட்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கின்றது என்ற எண்ணத்தை பதிவுசெய்திருந்தார்.

யூலை 23 நம் எல்லோருக்கும் கருப்பு ஜூலையாகும். அந்த நாட்களில் நாம் கறுப்புகொடிகட்டி. கண்டன ஊர்வலங்கள் நடாத்தி இக்கால சந்ததியினருக்கு 1981 இல் சிங்கள காடையர்களால் நம்மவர்கள் அனுபவித்த கொடும் துயரங்களை, நம்குலப்பெண்கள் சீரழிக்கப்பட்தை, வணிக வளாகங்கள் இரையாக்கப்படதை, நாம் அகதிகளாக ஓட ஆரம்பித்ததை எடுத்தியம்பி வருகின்றோம்.

ஆனால் இந்த ஆண்டு அதே நாளில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது(23.07.2011). அன்று நாம் ஒன்றுமே செய்ய முடியாது. நம் வரலாற்று காயங்களை மறைக்கும் அல்லது மறக்கச்செய்யும் ஆதிக்க வகுப்பினரின் இதுபோன்ற அடக்குமுறைகள் தொடருமானால் நிச்சயம் நமது வரலாறு நம்மோடு புதைந்து போகும் என்ற ஆதங்கத்தை முன்வைத்தார்கள். வரலாற்றை முன்னெடுக்கவேண்டிய ஆர்வத்திற்கு ஒளியேற்றினார்கள்.

எல்லா நாட்டிலுமே சுதந்திரத்திற்கான வழிமுறைகள் காலத்திற்கு ஏற்றால் போல மாற்றம் கண்டிருக்கின்றன. நமது போராட்டமும் பல சூழல்களில் மெருகேறியிருக்கின்றது. புது வழிகளில் நடைபோட்டிருக்கின்றது. அனைத்து போராட்ட வடிவங்களுமே வெற்றியை தந்துவிடுவதில்லை. நிறைந்த அனுபவ பாடங்களையும் தோல்விகளையும் தந்திருக்கின்றன. அதற்காக விடுதலை வேட்கையை அணையவிடக்கூடாது. பாதங்கள் நடக்க தயாராகிவிட்டால் பாதைகள் தானே கிடைத்துவிடும்.

வேதனையும் அச்சமும் கலந்து தொடர்ந்து பகிர்ந்து கொண்டவர்கள், சமுதாய மாற்றம் நிச்சயமாக இளைஞர்களால் முடியும் என்ற திசைக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

“இளைஞர்களுக்குள் மாற்றத்தை கொண்டுவந்து இளைஞர்கள் வழியாக சமுதாயத்திற்குள் செல்லும்போது நிச்சயமாக நல்ல மாற்றங்கள் ஏற்படும்.” என்ற உற்சாகம் கலந்து உத்வேகத்துடன் முன்வைத்தார்கள்.

கலாச்சாரம் பண்பாட்டு சுரண்டல்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல்போடவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எதிர்நீச்சல்போட்டு இந்நிலையை தாண்டிவிட்டால் எதிர்காலம் நமக்கு வசந்தமாகும். அதற்காக நாம் அணியமாவோம். வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் பரவலாக்குவோம் என்ற புரிதலுடன் கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது இக்கூட்டத்தை தவற விட்டவர்கள் நிறைய இழந்துவிட்டார்கள் என்றார்கள். புதிய தளங்களுக்குள் எங்களை அழைத்து சென்றுள்ளீர்கள். எங்களது பகுத்தறிவு பார்வைகளை புதுப்பித்துள்ளீர்கள் என்று சொன்னார்கள். எங்கள் பகுதிக்கு வாருங்கள் எங்கள் இளைஞர் யுவதிகளிடமும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள் போன்ற கருத்துக்களை பகிந்ந்து கொண்டார்கள்.

அப்போது அருகில் வந்த யுவதி ஒருத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் நெஞ்சை அரித்துகொண்டிருந்த தகவல்களை, கோபங்களை, எதிர்பார்ப்புக்களை, ஏமாற்றங்களை முதல்முறையாக இறக்கி வைத்துள்ளோம்.

எழுதவும் பேசவும் பயந்து வீட்டுக்குள் ஆத்திரத்துடன் அடங்கி கிடந்த எங்கள் உணர்வுகளை எடுத்து வைக்க இடமளித்தமைக்கு உளப்பூரிப்பான நன்றிகள். இனி நிச்சயம் சிறுவட்டத்திலாவது தொடர்ந்து கதைப்போம். வரலாற்றை உயிர்ப்புடன் பாதுகாப்போம் என்றார்கள். இப்போது எனக்கு மனம் நிறைந்தது.

சந்திப்போம்...

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
ஈழநேசன்

Wednesday, November 2, 2011

இந்தியப் படையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய உதவிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-5)
விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைப்பற்றுவதற்கென்று இரகசியமாக முன்னேறிய இந்தியப் பரா கொமாண்டோக்கள் மீது திடீரென்று புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடாத்த ஆரம்பித்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்தியப் படையினர் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படையினரில் கணிசமான அளவு படைவீரர்கள் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிவிட, தமது அடுத்த கட்ட நகர்வை மிகவும் நிதானமாகவே அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

அப்பிரதேசத்தின் ஒரு வீட்டிலிருந்த ராஜா என்பவரையும், அவரது மருமகனான குலேந்திரன் என்பவரையும் தமக்கு வழி காண்பிக்கவென அழைத்துக்கொண்டு, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

ராஜாவின் வீட்டில் இருந்து ஒரு ஒழுங்கை வழியாக ஒரு தொகுதி இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட அதேவேளை, பெரும்பாலான இந்தியக் கொமாண்டோக்கள் அந்த ஒழுங்கையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த வீட்டு வளவுகளினூடாகவே தமது நகர்வினை மேற்கொண்டார்கள். வேலிகள், மதில்கள் போன்றனவற்றில் ஏறிக் குதித்து அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடம் அமைந்துள்ளதாக கூறப்பட்ட பிரம்படி வீதிக்கு வந்துசேர்ந்ததும், அவர்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

அப்பகுதியில் உள்ள பனங்காணி ஒன்றிலிருந்தே முதலில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. முதலாவது துப்பாக்கி வேட்டிலேயே மூன்று இந்தியப் படை வீரர்கள் தாக்கப்பட்டு தரையில் வீழ்ந்தார்கள்.

இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஒரு அதிகாரி, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட பனங்காணிக்கு அருகில் அமைந்திருந்த வீட்டைக் குறிவைத்து செல் தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்தியக் கொமாண்டோக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்திய இராணுவத்தினர் செல் தாக்குதல் நடத்துவதற்கென்று தமது மோட்டார் லோஞ்சரை குறிவைத்திருந்த அந்த வீடு பொன்னம்பலம் என்ற இளைப்பாறிய சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது.

ஆரவாரங்கள் அதிகமானதைத் தொடர்ந்து அவர் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முற்பட்டபோதுதான், தனது வீட்டைக் குறிவைத்து இந்தியப் படையினர் மோட்டார் லோஞ்சரை நிலைப்படுத்திக் கொண்டிருப்பதை அவர் அவதானித்தார்.

உடனே தனது குடும்பத்தினரை தரையில் விழுந்து படுக்கும்படி உரக்கக் கத்திவிட்டு, இளைய மகளையும் இழுத்துக் கொண்டு தானும் தரையில் விழுந்து படுத்தார். அடுத்த வினாடி அவரது வீடு இந்தியப் படையினரின் செல் தாக்குதலுக்கு இலக்கானது.

மறுநாள் காலைவரை அவரும் குடும்பத்தினரும் ஒரு கட்டிலின் கீழே தரையில் படுத்தபடி கிடந்தார்கள். அந்த வீட்டின் கூரை முழுவதும் முற்றாகச் சேதமாக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் இருப்பிடம் ஒன்றைத் தாம் வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டதாக இந்தியப் படை கொமாண்டோக்கள்; தமது மேலதிகாரிகளுக்கு தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படையினர் ஆடிய கோர தாண்டவம்:

இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் அப்பிரதேசத்தில் இருந்த அனைத்துமே அவர்களுக்கு எதிரிகளின் இருப்பிடமாகத்தான் தென்பட்டன. அங்கு இருந்த அனைவருமே எதிரிகளாகவே அவர்களுக்கு தென்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு ஏற்பட்டிருந்த தோல்வியும், இயலாமையும், அச்சமும் அவர்களை அவ்வாறே சிந்திக்கவும் வைத்தது.

தம்மை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்த ஆரம்பித்ததும், அவர்கள் சகட்டுமேனிக்கு திருப்பிச் சுட ஆரம்பித்திருந்தார்கள். தம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட திசையை நோக்கி மட்டுமல்லாமல், அனைத்து திசைகளை நோக்கியும் அவர்கள் சுட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு வழி காண்பிக்கவென்று அழைத்துச் செல்லப்பட்ட ராஜா, பனங்காணியில் இருந்து புலிகள் தாக்குதலை ஆரம்பித்த மறுகணமே அருகில் இருந்த வீட்டின் ஊடாகப் பாய்ந்தோடி, தனது வீட்டை வந்தடைந்துவிட்டார்.

ராஜாவுடன் அழைத்து செல்லப்பட்ட அவரது மருமகனான குலேந்திரன் இந்தியப் படையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சண்டைகள் அரம்பித்துவிட்டதை உணர்ந்த ஜீவா என்ற பல்கலைக் கழக மாணவன், கிருபா என்ற தனது நன்பனுடன் அவனது சகோதரி ஒருவருடைய வீட்டில் இருந்து பின்புற வழியாக வெளியேற முற்பட்டபோது, அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.

தனபாலசிங்கம் என்ற விரிவுரையாளர் தனது குடும்பம் சகிதமாகவும், அயலவர்கள் சிலருடனும் தனது வீட்டினுள் மிகுந்த அச்சத்துடன் அமர்ந்திருந்தார். அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தச்சுத் தொழிலாளியான கோபாலக்கிருஷ்னன் என்பவரும் நிலமை பற்றி அறிந்து கொள்வதற்கு அங்கு வந்திருந்தார்.

சண்டைகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து வெளியே நகர முடியாதபடிக்கு அங்கேயே தங்கிவிட்டிருந்தார். அருகில் அதிகரிக்க ஆரம்பித்திருந்த துப்பாக்கிவேட்டுச் சத்தங்கள், அவர்களைப் பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தன.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் இருந்த மற்றவர்களுக்கு தனபாலசிங்கம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தார். ~~இந்தியப் படையினர் ஸ்ரீலங்கா இராணுவத்தைப் போன்று பொதுமக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடன் மட்டும்தான் அவர்களுடைய சண்டைகள் இருக்கும். அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் நிச்சயம் நேசிப்பார்கள். எனவே நாம் ஒன்றும் அதிகமாகப் பயப்படத் தேவையில்லை.|| என்று கூறிக்கொண்டிருந்தார்.

இந்தியப் படையினர் அந்த விரிவுரையாளரின் நம்பிக்கையை சிறிது நேரத்திலேயே சிதறடித்திருந்தார்கள்.

அவரது வீட்டிற்குள் புகுந்த சில இந்தியப் படை வீரர்கள், தனபாலசிங்கத்தையும், அவரது மனைவி, ஒரு குழந்தை போன்றவர்களை சுட்டுக் கொன்றார்கள். தனபாலசிங்கத்துடன் அவரது வீட்டில் தங்கியிருந்த அயல்வீட்டுக்காரரான கோபலகிருஷ்னனும் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றொரு பெண்மணி, அவருடைய ஒன்பது வயது மகன் உட்பட அங்கு தங்கியிருந்த வேறு ஆறு பேரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த வீட்டில் தங்கியிருந்தவர்களுள் ஏழு வயது நிறம்பிய ஒரு சிறுவன் மட்டுமே பலத்தகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

மற்ற அனைவரையும் இந்தியப் படையினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாகச் சுட்டுத்தள்ளியிருந்தார்கள்.

பராக் கொமாண்டோக்கள் அமைத்த தளம்:

இவ்வாறு கோர தாண்டவமாடியபடி தமது அமைதிகாக்கும் பணியினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் உடனடியாக அப்பிரதேசத்தில் ஒரு தளத்தினை அமைத்து நிலை கொள்ள வேண்டி இருந்தது.

இரகசியமாக நகர்ந்து புலிகளின் தலைவரைப் பிடிக்கும் தமது திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மிகுந்த சங்கடமான ஒரு நிலை அங்கு உருவாகி இருந்தது. அதாவது அங்கு தரையிறங்கியிருந்த இந்தியக் கொமாண்டோக்கள் பத்திரமாக திரும்பவேண்டும் என்ற கவலை பிரதானமாக அவர்களைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

அவசர அவசரமாகத் தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் சற்று பெரியதும், மதில்களுடன் கூடியதும், இலகுவாக நிலை எடுக்கக்கூடியதுமான ஒரு வீட்டை தமது தற்காலிக தளமாக மாற்றிக் கொள்ள இந்தியப் படையினர் தீர்மானித்தார்கள்.

அவர்கள் தமது தளத்தை அமைத்துக்கொள்வதற்கு ஏற்றாற்போன்று ஒரு வீடு அப்பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திருமதி விஸ்வலிங்கம் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடே அவ்வாறு இந்தியப் படை அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை கைப்பற்றுவதற்காக இந்தியப் படை அதிகாரிகள் சில கொமாண்டோக்களை அங்கு அனுப்பினார்கள்.

திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டினுள் நுழைந்த இந்தியப் படையினர், அங்கிருந்த பத்து பேரையும் ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொண்றார்கள். தாம் அந்த வீட்டினுள் முகாம் அமைக்கும் விடயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.

திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டை தலைமையகமாகக் கொண்டு, ஒரு பக்கத்தில் ரெயில் பாதையையும், கிழக்கே ஒரு வெட்ட வெளியையும் எல்லையாகக் கொண்டு ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியப் படையினர் தமது தளப் பிரதேசமாக மாற்றி நிலையெடுத்து நின்றார்கள்.

அவர்கள் அமைத்திருந்த தளப் பிரதேசத்தினுள் இருந்த, அந்தத் தளப் பிரதேசத்தினுள் நுழைந்த, அந்தத் தளப் பிரதேசத்தைக் கடந்து சென்ற அனைவரையும் அவர்கள் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றார்கள். அவ்வாறு செய்வதற்கான உத்தரவும் அவர்களுக்கு அவர்களது மேலதிகாரிகளினால் வழங்கப்பட்டிருந்தது.

திருமதி விஸ்வலிங்கத்தினுடைய வீட்டின் முன் அறையை அவர்கள் காயப்பட்ட தமது வீரர்களுக்கு சிகிட்சையளிப்பதற்கு ஏற்றாற்போன்று ஒரு சிறு மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள்.

தமது முகாம்களில் இருந்து அவர்களுக்கு மேலதிக உதவிகள் வந்து சேரும் வரைக்கும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்படியான எத்தனங்களை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் அவர்கள் நிலை கொண்டிருந்த பிரதேசத்தினை பாதுகாக்கும் நோக்குடன் யாழ் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் புலிகளின் நிலைகள் அமைந்திருந்த இடங்கள் என்று இந்திய பராக் கொமாண்டோக்களினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட இடங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றபடியே இருந்தன.

தமிழ் மக்கள் அனைவருமே இந்தியப் படைக் கொமாண்டோக்களுக்கு புலிகளாகவே தென்பட்டதால், அவர்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த வீடுகளையும் புலிகளின் இருப்பிடமாகவே அறிவித்திருந்தார்கள்.

இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் குடாமீது ஷெல் தாக்குதல்களை நடாத்துவதற்கு இந்தியப் படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடமும் உதவி கோரி இருந்தார்கள்.

மிகவும் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் ஸ்ரீலங்காப் படையினர் அந்த உதவிகளை தாராளமாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்..


Tuesday, November 1, 2011

jkpo; ,dj;jpd; jkpodpd; mwpitf; fz;L gae;j cyfk;!!!
புலிகள் உருவாக்கிய "ரோப்பிடோ" ஏவுகணைகள் அயல் நாடுகள் அச்சத்தில் மூழ்கியதா ?
விடுதலைப் புலிகள் சமாதான காலகட்டத்திலும் அதற்கு பிந்திய நிலையிலும் ஆயுதப் பற்றாக்குறை காரணமாக அவர்களே ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பல நீர் மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் தயாரித்திருந்தனர். நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து ஏவப்படும் ரோப்பிடோ என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் போல நிலத்தில்(அதாவது கடற்கரைகளில்) இருந்து ஏவக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் தாமே தயாரித்திருந்தனர். சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட இவ்வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி புலிகள் இலங்கை கடற்படையின் சில டோறாப்படகுகளை மூழ்கடித்தும் உள்ளனர்.
ஆயுதங்களை மாற்றுவதும் அவற்றை மேலும் மேம்படுத்தி அதிசக்திவாய்ந்ததாக மாற்றுவதில் புலிகளுக்கு நிகர் புலிகளே தான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் அதிகாரி ஒருவர். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் வைத்தே புலிகள் தமது கடல் தாக்குதல் படகுகளையும் மற்றும் ஏவுகணைகளையும் தயாரித்து வந்தனர் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். தாம் தயாரித்த ஏவுகணைகளை நீருக்கு அடியில் செலுத்தவும் ஏவுகணைகளை தயாரிப்பு நிலையங்களில் இருந்து கடற்கரைக்கு கொண்டுவரவும் அவர்கள் பிரத்தியேக வசதிகளைச் செய்துவைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த ரோப்பிடோ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது. மற்றும் அதில் அதி தொழில்நுட்ப வசதிகளும் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் தயாரித்த சிலவகையான நீர் மூழ்கி ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தது என்றும் ஒரு முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான டோராப் படகு ஒன்று அதிஷ்டவசமாக தப்பியதை அடுத்து அதனை காங்கேசன் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று கடற்படையினர் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகள் காங்கேசன் துறைமுகம் சென்று அத்தாக்குதல் படகை ஆராய்ந்தவேளையே அப்படகு ரோப்பிடோ மூலம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட இலங்கையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே விடுதலைப் புலிகள் சாதாரண சிலின் ரக விமானத்தைக் கொள்வனவு செய்து அதனை வன்னிக்கு எடுத்துச் சென்ற பின்னரே அதனை போர் விமானமாக மாற்றியுள்ளனர்.

(அதற்கான ஆதாரப் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)
விடுதலைப் புலிகள் சமாதான காலகட்டத்திலும் அதற்கு பிந்திய நிலையிலும் ஆயுதப் பற்றாக்குறை காரணமாக அவர்களே ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பல நீர் மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் தயாரித்திருந்தனர். நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து ஏவப்படும் ரோப்பிடோ என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் போல நிலத்தில்(அதாவது கடற்கரைகளில்) இருந்து ஏவக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் தாமே தயாரித்திருந்தனர். சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட இவ்வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி புலிகள் இலங்கை கடற்படையின் சில டோறாப்படகுகளை மூழ்கடித்தும் உள்ளனர்.ஆயுதங்களை மாற்றுவதும் அவற்றை மேலும் மேம்படுத்தி அதிசக்திவாய்ந்ததாக மாற்றுவதில் புலிகளுக்கு நிகர் புலிகளே தான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் அதிகாரி ஒருவர். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் வைத்தே புலிகள் தமது கடல் தாக்குதல் படகுகளையும் மற்றும் ஏவுகணைகளையும் தயாரித்து வந்தனர் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். தாம் தயாரித்த ஏவுகணைகளை நீருக்கு அடியில் செலுத்தவும் ஏவுகணைகளை தயாரிப்பு நிலையங்களில் இருந்து கடற்கரைக்கு கொண்டுவரவும் அவர்கள் பிரத்தியேக வசதிகளைச் செய்துவைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த ரோப்பிடோ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது. மற்றும் அதில் அதி தொழில்நுட்ப வசதிகளும் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் தயாரித்த சிலவகையான நீர் மூழ்கி ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தது என்றும் ஒரு முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான டோராப் படகு ஒன்று அதிஷ்டவசமாக தப்பியதை அடுத்து அதனை காங்கேசன் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று கடற்படையினர் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகள் காங்கேசன் துறைமுகம் சென்று அத்தாக்குதல் படகை ஆராய்ந்தவேளையே அப்படகு ரோப்பிடோ மூலம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட இலங்கையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே விடுதலைப் புலிகள் சாதாரண சிலின் ரக விமானத்தைக் கொள்வனவு செய்து அதனை வன்னிக்கு எடுத்துச் சென்ற பின்னரே அதனை போர் விமானமாக மாற்றியுள்ளனர்.

(அதற்கான ஆதாரப் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது).
வெற்றி யாருக்கு? ‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’ - ச. வி. கிருபாகரன்

இதுவரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில, வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம்.

இதேவேளை ஏன் தமிழ் தலைமை காரணமாக இருந்தது என ஆராயுமிடத்து, தமிழர் தலைமை என்றும் பொதுநலத்தைவிட சுயநலமாக வாழ்ந்தார்கள் என்பது வெளிப்படையானது.

மந்திரிப்பதவி, மகளுக்கும் மகனிற்கும் தூதுவர் பதவி, மைத்துனனிற்கு செயலாளர் பதவியென சுயநலத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, திம்பு பேச்சுவார்த்தை மூலம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட வேளையில், ஆயுதப் போராட்டம் ஓர் முழுவடிவத்தை அடைந்தது மட்டுமல்லாது சிறீலங்கா அரசும் சிங்கள இராணுவமும் பெற்றுவந்த அரசியல் வெற்றிகள் யாவும் தவிடுபொடியாக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் போராளிகளின் இராணுவ வெற்றிகள் உலகை வியக்கவைக்கும் வகையில் நடைபெற்று, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் சர்வதேசத்தின் அங்கீகாரம் மட்டு இல்லாது சகல கட்டமைப்புக்களும் அடங்கிய ஓர் தமிழீழ அரசு இருந்தது என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிலர் நேரில் விஜயம் செய்து தமிழீழ அரசின் முன்னோடிகள், மூதாதையர், தலைவர்களை கண்டு வாழ்த்தியும் வந்தனர்.

துரதிஸ்திவசமாக பொதுநலத்திலும் சுயநலத்துடன் வாழ்ந்த சிலர் தமிழீழ போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதாக் கூறி கபடத்தமான வாழ்க்கை வாழ்ந்ததினால் ஈழத்தமிழர் இன்று நிலத்திலும், புலத்திலும் பெரும் ஏமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இவ் அரசியல் விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவைச் சுருக்கமாக கூறுவதானால் சர்வதேச அங்கீகாரத்திற்கு காத்திருந்த நாம் இன்று யாவற்றையும் இழந்து எமக்குள்ளிருந்த சந்தோசம், சகோதரத்துவம், பாசம், நட்பு யாவற்றையும் இழந்ததுடன், எம்மில் பலர் எமது இனத்தின் பொது எதிரி சிறிலங்கா அரசு என்பதையும் மறந்து தமது தோழர்கள், நண்பர்கள், சகாக்களுடன் தினமும் சர்ச்சைப்பட்டு சிறீலங்கா அரசின் கபடமான திட்டங்கள் சரியான வகையில் செயல்பட துணை நிற்கின்றனர்.

வெட்கம், ரோசம், மானம்

பொது நலத்திலும் சுயநலம் இருந்தாலும் தமிழர்கள் வெட்கம் ரோசம் உள்ளவர்கள் என நமது மூதாதையர் கூறுவது வழக்கம்.

உண்மையில் கூறுவதானால் புலம் பெயர்வாழ் செயல்பாட்டாளர்கள் பலர் வெட்கம், ரோசம், மானம் பற்றி அறிந்துள்ளார்களா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

காரணம் எமது தமிழினத்தை அழித்து எமது நிலத்தை சிங்கள பௌத்த பிரதேசமாக பிரகடனம் செய்யும் சிங்கள அரசும், அதனுடைய புலனாய்வு பிரிவின் செயல்பாடுகளுக்கு துணைபோவோர்களாக புலம் பெயர்வாழ்வில் சில சங்கங்களும், செயற்பாட்டாளர்களும், காடையர்களினால் நிர்வாகிக்கப்படும் தொழில்சார் அற்ற சில ஊடகங்களும் செயல்படுவது மிகவும் மன வேதனைக்குரியது.

‘‘நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையாக உள்ளது’’.

முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தொல்லைகள் கொடுத்து தண்டிக்கபட்டவர்களும், விடுதலைப் போராட்டத்திற்கு திரைமறைவில் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, செல்லாக்காசுகளாக தமிழீழ சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சந்திக்கு சந்தி கடை தெருக்களில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வசைபாடியவர்களுடன் சில சங்கங்களும், செயற்பாட்டாளர்களும் ஏன் தற்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்?

இவ் செல்லாக் காசுகள், காடையர்கள் கொள்கையற்றவர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருடனும் வருமானத்தின் அடிப்படையில் கூட்டுச் சேரும் பச்சோந்திகள்.

காரணம் ‘பூவுடன் சேர்ந்த வாழை நார் போல்’ கௌரவம் அற்ற தமக்கு, கௌரவத்தையும் பிரபல்யத்தை, முன்பு தாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வசைபாடியதற்கு பாவமன்னிப்பையும் பெறுவதே இவர்களின் திட்டம், செயல, நோக்கம் இதுவே யதார்த்தம்.

இருவருக்கிடையில் அல்லது இரு சங்கங்களுக்கிடையில் அல்லது இரு தலைவர்களுக்கிடையில் சர்ச்சைகள் உருவானால் அவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எரியும் நெருப்பில் நன்றாக எண்ணை ஊற்றுபவர்கள் தான் இவர்கள்.

குழப்ப வாதிகள் யாரும் சங்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதையோ, நட்பு ஏற்படுவதையோ அனுமதிக்கமாட்டார்கள். காரணம் சங்கங்கள் ஒற்றுமைப்பட்டால் தங்களின் வண்டவாளங்கள் வெளியாவது மட்டுமல்லாது, தமக்கு ஓர் முக்கிய இடம் இல்லாமல் போய்விடுமெயென பயப்படுபவர்கள் இவர்கள்.

உதாரணமாக இரு சங்கங்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தால, இச் சங்கங்கள் ஒற்றுமைப்படக் கூடாது என்ற கருத்துக் கொண்ட பிரிவுகள் இரு பகுதியிலும் உள்ளனர்.

அத்துடன் வேறுபட்ட புலனாய்விற்கு தகவல் கொடுப்போரும் இரு பகுதியிலும் இருப்பார்கள். இவ் அடிப்படையில் இரு சங்கங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படும்பொழுது எல்லாமாக ஆறு பிரிவுகள் ஏற்படுகின்றன. இவற்றை தமக்கு சதாகமாக காடையர்களினால் நிர்வாகிக்கப்படும் தொழில்சார் அற்ற ஊடகங்கள் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்த் தேசியம்

தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள எந்த தமிழனும் சிங்கள அரசை சந்தோசப்படுத்தும் எந்த வேலைத்திட்டங்களிலும் ஈடுபடமாட்டார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது, தமிழீழத்திற்கான இலட்சியத்துடன் இணைந்து பயணிப்பது. நமது முன்னோர் கூறியது போல் பாதைகள் மாறலாம், நிலைமைக்கு ஏற்ற முறையில் தரித்தும் நிற்கலாம், ஆனால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

தமிழ் மக்களின், தமிழீழ மக்களின் ஒற்றுமையை குலைக்காது பயணிப்பவர்கள், தமிழ் தேசியவாதிகள். மற்றவர்கள் வியாபாரிகள், தமிழ்த் தேசியத்தை சூறையாடுபவர்கள்.

ச. வி. கிருபாகரன்