Thursday, July 2, 2009

 மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் புலியெதிப்பாளர்களும், நவீன புலித்தலைமையும்  நாளந்த தேவைகளுக்கான அழுத்தங்களும், அரசியல் கோரிக்கைக்கான அழுத்தங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் செயற்பாடுகளே இன்றுள்ள முக்கிய செயற்பாட இருக்க வேண்டும். ஏனெனில் அரச சார்பு குழுக்கள் சோறே முக்கிய காரணியாகக் காட்டி மக்களின் நலனை மழுங்கடிப்பதில் முதன்மையாளர்களாக இருக்கின்ற போது அவற்றிற்கு மாற்றீடாக இரண்டு கோரிக்கைகளையும் நேர்கோட்டில் பயணிக்கும் அரசியல் தந்திரோபாயம் அவசியமானதாகும். இவற்றில் இருந்தே தேடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.புலிகள் தமது வர்க்க எதிரிகளை இல்லாது ஒழித்தது. இவைகள் பல எதிர்வினைவுகளுக்கு காரணமாகியது.சரி இருக்கட்டும்  மற்றைய இயக்கங்கள் தமது எதிரியாகிய புலியை சிறிலங்கா இனவாத அரசுடன் இல்லாது ஒழிக்க ஒத்துழைத்தனர். சரி இருக்கட்டும்..  கூடிக்குலாவிய நண்பர்களால் சதிக்கு உள்ளாகிபலியாகிப்போனது புலிகளின் தலைமை. சரி இருக்கட்டும் பொது எதிரியை வீழ்த்துவதற்காய் சிறிலங்கா இனவாத அரசிற்கு துணைபோன உரிதிகளை இன்று தம்அணியில் இணையுமாறு நிர்ப்பந்தம்ஃ  சரி இருக்கட்டும் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இது நவீன புரட்சிவாதிகள். நவீன தமிழ் தலைமைகளும்.. சரி இருக்கட்டும்கனடாவும், பிரித்தானியாவும் தமிழ் மக்களது பிரச்சனையினை தீர்க்கும் என்கின்றனர் புதிய புலியிசவாதிகள். சரி இருக்கட்டும். இன்றைய அவலத்தைப் போக்க புதிய பாதை தேவை என்பதை ஒவ்வொருவரும் தத்தம் நிலைகளில் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தெரிவு செய்யவேண்டிய பாதை கடந்தகால தவறுகளில் இருந்து பெறப்படும் படிப்பினைகளில் இருந்து தொடங்கப்படவேண்டும். கடந்த காலப் படிப்பினைகளை சரியாக உள்வாங்காது மக்களின் நலனை பின்தள்ளும் பாதையை தெரிவு செய்கின்ற போது தொடர்ந்தும் இருளுக்குள் இருக்கப்போவது மக்களே. ஆனால் மக்களைச் சொல்லி அரசியல் பேசுகின்ற சக்திகள் தத்தம் நலனை முதன்மைப்படுத்திக் கொண்டு பாதையை தெரிவு செய்ய முனைகின்றதையும் அவதானிக்கவேண்டும்.1983 பின்னரான புலிகளின் ஆயுதகவர்ச்சியின் அழுத்தம் மற்றைய போராட்ட இயக்கங்களின் இராணுவத்தின் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ்மக்களிடையே தேசிய பொருளாதார வளர்ச்சி குறையாக இருந்த நிலையில் உருவான தேசியத்தை பிரதிநிதித்துவத்தின் வலிந்ததெடுத்த தாக்குதலும் இளம் போராளிகளின் மீதான பார்வை தமது நாயகர்களின் வெற்றி மீதே அமைந்திருந்தது. இந்தக் கவர்ச்சியே அரசியல்; அடிப்படையை நிராகரித்த ஆயுத முதன்மைக்கும் காரணமாக இருந்தது. இவற்றில் மற்றைய இயக்கங்கள் புலிகளைப்போல வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு. இருந்த போதிலும் மற்றைய இயக்கங்களை புலிகள் தடைசெய்ய முன்னராக படையினரை முகாம்களுக்குள் முடக்கியதில் அனைத்து இயக்கங்களினதும் பங்களிப்பு இருந்து என்பது வரலாறு.  ஒரு போராட்டத்தின் அரசியலே ஆயுதத்தை கட்டுப்படுத்தவும், அதனை தேவையானபோது பயன்படுத்தவும் முடியும். ஆனால் எமது போராட்டம் அவ்வாறு நடைபெறவில்லை. ஆனால் ஆயுதங்களின் வழிபாடுகளை முன்வைத்தே எமது போராட்டம் வீங்கம் பெற்றது. அரசியல் ஆயுதப்போராட்டத்தை தீர்மானிக்க வில்லை. புலிகள் ஒரு ஆயுதத்தை பத்திரமாக காப்பாற்றுவதைப் கூட மனித உயிரிலும் மேலானதாக பலமாக கருதிவந்தார்கள். இதனை எந்தக் காலத்திலும் மாற்றியது கிடையாது. உதாரணத்திற்கு சீலன் என்ற சார்ல்ஸ் அன்ரனி தன்உயிரை தமது தோழனால் போக்கிய பின்னர் ஆயுதத்தை அமைப்பிடம் கொண்டு சேர்க்கும் படி கூறியதாக பெருமைப்பட்டனர்.  அரசியலே ஆயுதத்தை கட்டுப்படுத்தும் என்று எப்பவே உலகின் தலைசிறந்த கெரில்லாப் போராளி மாவோ சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் இன்று ‘ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக் காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.(http://nitharsanam.com/?art=27708 ) இதில் கூட பாதி உண்மைதான் இருக்கின்றது. காரணம் ஆயுதப் போராட்டம் என்பது ஒரு முறையல்ல என்பதற்கு அப்பால் விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக் காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம் என்பது தறவாற கருத்தாகும். சிலவாரங்கள் வரை ஆயுதமே ஒரே வழியாக இருந்தது என்பது மாத்திரம் அல்ல. ஆயுதம் என்பது எம்மை அழிவில் இருந்து பாதுகாக்கும் உபகரணம், நமது ஒடுக்குமுறையாளனிடம் இருந்து எம்மை பாதுகாப்பதற்கே ஆயுதம். எம்மை பாதுகாத்துக் கொள்வது ஒரு போராட்டத்தை பாதுகாப்பதன் அடிப்படையில் இருந்து உருவாகின்றது. மக்களை, போராடுபவர்களை ஆயுதம் கொண்டு வேட்டையாடுகின்ற நிலையில் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆயுதம். விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக் காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம் என்று கூறுவது கூட தான் விசுவசித்த தலைமைக்கும், மக்களுக்கும் செய்யும் துரோகம் தான்.  தென், லத்தீத் அமெரிக்க, பிலிப்பீன்ஸ், குர்டர்களின் ஆயுதப்போராட்டங்கள் தொடர்ச்சியாக வளர்ச்சியும், தளர்ச்சியையும் கொண்டதாக இருப்பினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவர்கள் சிறுபிள்ளை அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவது போல விளையாட்டு அரசு உருவாக்கவில்லை. பெருமைக்காக மரபுபடையணியமைத்து பெருமைபாராட்டவில்லை. தமிழர்களின் போராட்டத்தைப் போன்று கவர்ச்சிகரமான நடைமுறைகளில் எந்தவித கவர்ச்சிகரமான போராட்ட தந்திரோபாயங்களும் முன்வைக்கவில்லை.  நாம் வாழ்கின்ற காலத்தில் நடந்த நேபாளப் போராட்டம் என்பது அரசியலே தீர்மானித்தது மட்டுமன்றி எதிரியிடம் இருந்து பாதுகாக்கும் கருவியாகவே ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு நேபாளத்தில் ஆயுதப் போராட்டம் தொரடப்பட்ட நிலையில் தேவையானபோது அவை மௌனிக்கப்பட்டிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் தொடரமாட்டாது என்று கூறவில்லை. வௌ;வேறு வடிவத்தில் தொடரும் என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆயுதங்களின் மேல் மாத்திரம் காதல் கொண்டவர்கள் அல்ல. ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக் காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம் என்று உலகில் நடைபெறும் போராடங்களுக்கும் மங்களம் பாடுகின்றனர். இந்த முடிவு என்பது ஏகாதிபத்தியங்களை மகிழ்வுறச் செய்யும். ஏனெனில் உலகில் எந்தப்பாகத்தில் நடைபெறும் நீதிக்கான போராட்டங்களும் தமது இருப்பை பாதுகாக்கவல்லதாக இருக்க வேண்டும் என்ற பொறிமுறைக்குள் இயங்குவதால் புலிகளின் இந்த முடிவு ஏகாதிபத்தியங்கள் ஏற்றுக் கொள்ளும்.  ‘உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும்.’ தயா மோகன் jah Nkhfd; மேலும் கூறுகின்றனர். அன்னியச் சக்திகளை அம்பலப்படுத்துவதை விட்டு, அன்னியச் சக்திகளின் சதிகளை அம்பலப்படுத்துவதை விட்டு விடுகின்றனர். மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சியாது மீளவும் லொபி முறையிலான இராஜதந்திர முறையை முன்னிறுத்துவது. இங்கு ஏகாதிபத்தியங்களின் தயவை ஏற்றும் படி கோருகின்றனர்.  ஆயுதப்போராட்டத்தை நிராகரிப்பது, மக்கள் சார்ந்த போராட்டத்தை மீளவும் மறுதலிக்கின்றனர்.  மேலும் இன்றைய உலக ஒழுங்கில் தமக்கிடையேயான சந்தையைப் பிரிப்பதில் உள்ள முரண்பாட்டு பொறிமுறைக்குள் இயங்கும் ஆதிக்க சக்திகளின் நலன்பால ஆர்வ வெளிப்பாடுகளை தமக்காக ஆதரவு வெளிப்பாடாக காட்டுகின்றனர். ‘‘நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.’(தயா)jah) எனக் கூறுகின்றார்கள்.  ‘‘இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.’’ இங்கு புலிகளின் தலைமை கடைசிவரைக்கும் வெளியார் தலையீடு இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் மரணத்திற்கு சில மணிநேரத்திற்குப் முன்னரே தம்மை சர்வதேசம் கைவிட்டது என உணர்ந்திருந்தார்கள். இதனையே சூசையும் இறுதி தொலைபேசிமூலமாக தமிழ் மக்களுக்கு கூறிச் சென்றார். அவர்கள் தமது இறுதி நேரத்தில் சொன்னதே உண்மையானது. ஆனால் இன்று சர்வதேச சமூகத்தை நோக்கிய இராஜதந்திர முயற்சிமூலமாக எதனைப் பெற்றுக் கொள்ளப்போகின்றீர்கள்?சர்வதேச சமூகம் என்பது உலகத்தை ஒடுக்குபவர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களே. ஆனால் அந்த நாட்டு மக்களிடம் உங்களுக்கான ஆதரவுத் தளத்தை கடந்த 30 வருடங்களாக உருவாக்கவும் இல்லை. இப்போதும் செய்வதற்கு தயாரில்லாது குறுக்குவழியில் அதாவது லொபி நடவடிக்கைகள் மூலமாக சாத்தியப்படுத்தலாம் என்று நம்பச் சொல்கின்றீர்கள்.  புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை மாத்திரம் தான் மேற்கு வெறுத்ததா?...  இந்த கருத்தோட்டத்தை ஆளமாக பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் கடந்த கலத்தில் எதிரி யார் என்ற வரையறை ஏதுமின்றி தமக்கு உதவிபுரியக் கூடியவர்களின் உதவியைப் பெறுவது ஒன்றே தமது குறிக்கோளாக விடுதலைப்புலிகள் செயற்பட்டனர். இவர்கள் தாம் பிழைவிடாத சக்தி என்று பெருமையைக் கொண்ட அமைப்பாக இருந்தனர்.  இன்று புலிகள் ஆயுதம் அற்ற நிலையில் இருப்பதால் விடுதலைப்புலிகளை சர்வதேசம் தனது பேச்சுவார்த்தைக்கான பங்களாளிகளாக ஏற்றுக்கொள்ளும் என்று கருதிக் கொள்கின்றனர். இவைகள் ஒரு வகையில் உண்மையானதே. விடுதலைப்புலிகளின் சந்தைப் பொருளாதாரத்தை சிரமென்று ஏற்றுக் கொள்பவர்கள். (சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய சக்திகள் தீர்மானிக்கம் சக்தியாக இலலை) இவர்களை மேற்கு தமது தரகுசக்தியாக ஏற்றுக் கொள்ளும் அதனால் தமிழ்மக்களுக்கு என்ன பலன்? மீளவும் தமிழ் மக்களின் இறைமையை பெற்றுக் கொள்ளக் கூடிய சக்தியாக தம்மை உருவாக்கிக் கொள்வதை தவிக்கின்றனர். நவீன புலித்தலைமையானது மேற்கிற்கு தரகு கூட்டமாக செயற்பட தயாராக இருப்பதை புலிகளின் பிரச்சாரர்கள் சுட்டி நிற்கின்றனர். ஒரு தேசத்தின் உருவாக்கத்தை வலிந்தெடுக்க முடியாது என்ற அனுபவப்பாடத்தை இவர்கள் கற்றுக் கொள்வதாக இல்லை.  சுருக்கமாகச் சொன்னால் உங்கள் தலைமை இனவாதிகளை கொத்திக் குதறியதை மறைமுகமாக அங்கீகரிப்பவர்களாகவே இருக்கின்றீர்கள். ஆயுதமே விடுதலைப்புலிகளை பங்காளிகாக கொள்ளத் தடையாக இருந்ததாக இப்போ கூறுகின்றீர்கள்.  ஆனால் நீங்கள் போற்றிப்பாடிய தலைமையைச் சேர்ந்த கடல்படைதளபதி சூசை சர்வதேசம் தம்மை கைவிட்டுவிட்டது மாத்திரம் அல்ல. அவர்களுடன் இருந்த மக்களையும் கைவிட்டது என்பதை இன்று மூடி மறைக்கின்றீர்கள்.  சில விடயங்களை பார்ப்பது நல்லது   
· *பேரலையின் பின்னர் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளை அங்கீகாரம் என்றுகருதினீர்கள்  · *பேச்சுவார்த்தை உங்களுடன் நடைபெற்ற போது உங்களுக்கானஅங்கீகாரம் என்று கருதினீர்கள்  · *தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைத்தபோது உங்களுக்கான அங்கீகாரம் என்று கருதினீர்கள்  · *உலக நாடுகளுக்குபயணம் செய்த போது உங்களுக்கான அங்கீகாரம் என்று கருதினீர்கள் இந்தக் கருத்துக்கும் சூசையின் இறுதிமரண வாக்குமூலத்திற்கும் பெரும் இடைவெளி இருப்பதை உணர விடாது மக்களை தடுக்கின்றீர்கள். அன்னிய சக்திகளின் செயற்பாட்டிற்குப் பின்னால் ஒரு அரசியல் இருந்ததை உணரவில்லை. புலிகள் பலமாக இருந்த போது அங்கீகாரம் பெற்ற போது நந்திக்கரை வரை நிற்கதியாக விட்டு கொத்திக் குதறிய போது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் ஏன் காப்பாற்றவில்லை? நீங்கள் பலமாக இருந்த காலத்திலும் சரி  நீங்கள் கொத்திக் குதறப்பட்ட வேளையும் சரி  இன்றும் இராஜதந்திர வழிகளில் போராடுவதாக கூறும் நேரத்திலும் சரி சர்வதேச அரசியல் மாறிவிட்டதா?  அன்னியசக்திகளின் பின்னால் ஒரு அரசியல் இருந்ததை நீங்கள் வெகுவாகவே மக்களிடம் மறைக்கின்றீர்கள். தொடர்ந்தும் நாடுகடந்த அரசாங்கம் என்ற மண்குதிரையில் நம்பி மக்களை ஏமாறும்படி கோருகின்றீர்கள்.  இவர்களின் நாடுகடந்த அரசாங்கம் என்பது கூட மற்றைய இனங்களின் ஒற்றுமையை குழிதோண்டிப்புதைக்கும் ஒரு செயற்பாடேயாகும். பரந்து பட்ட ஐக்கியம் என்பது தளத்தில் இருந்து அரசியல் கோரிக்கை ஊடாக இணைந்து செயற்படுவதன் ஊடாக பெறமுடியுமாகும். இவற்றைத் தவர்த்து வெளியில் இயங்குவது வெறும் காகித அமைப்பாக இவர்கள் இயங்க முடியும். காகித அமைப்பாக இருந்து கொண்டு தாம் சேர்ந்த மூலதனத்தை இன்னும் பெருக்கிக் கொண்டு செல்ல முடியும். இத்துடன் இவர்கள் வரலாற்றுப் படிப்பினையை கவனத்தில் கொள்ளவில்லை. தாம் வந்த பாதையான ஜனநாயக மறுப்பு அரசியலை மீட்டுப்பார்க்கவில்லை.  புலிகள் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் புலிகளின் செயற்பாடுகள் மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்குவதன் ஊடான செயற்பாடு அமையவில்லை. மக்களை விட்டு வெகு அன்னியப்பட்டே புலித்தலைமை இருந்திருக்கின்றது. இன்றிருக்கும் புலித்தலைமை அரசுடன் ஏதோ ஒருவகை சமரசத்திற்கு போகும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்;. அவ்வாறு சமரசத்திற்கு செல்லாவிடின் சரணடைந்தவர்களின் இருப்பு கேள்விக்குறியானதே.  இதே போல புலிகளின் உள்ளே உளவாளிகள் இருக்கையில் எவ்வாறு சீர்திருத்தம் அமைப்பை செய்தாலும் இவர்களால் முன்னேற முடியாது என்பது ஒரு புறமிருக்க. இத்துடன் இன்றைய புதிய அதிகார வர்க்கத்திற்கான மக்கள் அடித்தளம் இல்லை. இருக்கின்ற மிகுதி மிச்ச கட்டமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக முயற்சிக்கின்றனர். வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தை கொண்டிருப்பார்களா அல்லது இல்லை என்பதல்ல பிரச்சனை. போராட்டமே வாழ்க்கையாகிப் போய் நிர்க்கதியாகி இருக்கின்ற மக்களின் தேவையில் அடிப்படையில் அமைந்த செயற்பாடுகள் முக்கியமானதாகும். தொடரும்...

No comments:

Post a Comment