Monday, September 7, 2009

தப்பிய பொட்டு அம்மன்,சூசை: சிங்கள ஊடகம் தகவல்!

கொழும்பு: முல்லைத் தீவுப்பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது பொட்டு அம்மன், சூசை ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியிருப்பார்கள் என்று இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அந்த ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்...'' இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நந்திக்கடல் பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையின்போது புலிகள் இயக்க உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன், கடல்புலிகள் பிரிவுத்தலைவர் சூசை ஆகியோர் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம்.

அவர்கள் தன்னிச்சையாகவோ. அல்லது வெளிநாட்டில் உள்ள ஆதரவாளர்கள் அறிவுறுத்தலின் பேரிலோ தப்பியிருக்கலாம். என்று இராணுவ வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்."என்று தெரிவித்துள்ள அந்த ஊடகம், மெலும் தனது செய்தியில் '' புலிகள் இயக்கத்தலைவர்கள் தப்பியிருப்பதால் தான் இந்திய அரசு தொடர்ந்து கேட்டும் கூட பொட்டு அம்மன், பிரபாகரன் ஆகியோரின் இறப்பு சான்றிதழை அளிக்க இலங்கை அரசு தயக்கம் காட்டிவருகிறது.

இந்திய அரசுக்கு இறப்புச்சான்று அளித்து அதன் பின் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் உயிருடன் இருப்பது உலகுக்கு தெரியவந்தால், உலக அரங்கில் இலங்கைக்கு கடும் நெருக்கடியும், அவப்பெயரும் ஏற்படும்.

இதனால்தான் இறப்புச்சான்றிதழை இதுவரை இலங்கை அரசு அளிக்கவில்லை."என்று சிங்கள ஊடகம் செய்தி வெளிவியிட்டுள்ளது.

No comments:

Post a Comment